அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்கள் என 56 பேருக்கு கொரோனா

0 8360
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்கள் என 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .

ஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை, மாணவிகள் என 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லெஜிலியா அரசு உதவி பெறும் பள்ளியில் 9,10,12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. விடுதியில் தங்கி பயிலும் மாணவி ஒருவருக்கு முதலில் கொரோனா உறுதியானது.

இதையடுத்து, அங்குள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், ஒரு ஆசிரியை மற்றும் மாணவிகள் என 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை அடுத்து பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு, அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதோடு, இரண்டு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments