இலங்கை அதிபர் - பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு : இரு தரப்பு நல்லுறவுகள்,வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை
இலங்கை அதிபர் மகிந்தா கோத்தபயா பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இரு நாட்டு முக்கிய வர்த்தக முன்னேற்றங்கள் குறித்து இருவரும் ஆய்வு செய்ததாக கோத்தபயா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இம்மாத இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காது என்று கூறப்படுகிறது.
ஆயினும் கடைசி நேரத்தில் இந்தியாவின் வாக்கைப் பெற்றால் இலங்கைக்கு பெரும் ஆதரவாக இருக்கும்.
எனவே இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி, கோத்தபயா பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டார் .
Comments