தமிழக கோவில்களில் மகாளய அமாவாசை கொண்டாட்டம் கோலாகலம்..! பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம்

0 7933
தமிழக கோவில்களில் மகாளய அமாவாசை கொண்டாட்டம் கோலாகலம்..! பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் நாகுலத்துமேடு திரௌபதி அம்மன் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு தீ திமிதி திருவிழா நடைபெற்றது. விமரிசையாக நடந்த விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.

காரைக்கால்:

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பிரசித்தி பெற்ற சனிபகவான் ஆலயத்தில் சனிக்கிழமையுடன் கூடிய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த கோட்டைமேடு பகுதியில் உள்ள கோவில்களில் ஆயுதப் படை போலீசார் சார்பில் உலக நன்மைக்காக ஆயிரத்து ஒரு திருவிளக்குகள் கொண்டு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆதி திரௌபதி அம்மன் கோவிலில் 180-வது தீமிதி திருவிழா நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments