பாஜகவின் B டீம் ஆ மக்கள் நீதி மய்யம்? திமுகவின் விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில்

0 5184
பாஜகவின் பி அணியா மக்கள் நீதி மய்யம்? திமுகவின் விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில்

பாஜக உருவாக்கிய இரண்டாவது அணி என்று திமுக தம்மைப் பற்றி விமர்சித்ததற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய கமல்ஹாசன், திட்டமிட்டு திமுக இப்படி ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். திமுக தனது மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியரை இழந்துவிட்டது என்றும் அவர்கள் தன்னைப் பற்றி கூறி வரும் கதைகளை விட அதிகமான கதைகளை அவர்களைப் பற்றி தம்மால் கூற முடியும் என்றும் கமல் விமர்சித்தார்.

ஒருவேளை தேர்தலில் தோல்வியடைந்தால் அரசியலைவிட்டு போய் விடுவீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்று கமல் பதிலளித்தார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் நல்லவர்கள் ஓரணியில் சேரும் வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments