மத்தியபிரதேசத்தில் இந்தூர், போபால் நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தபடும்; கொரோனா தொற்று பரவலையடுத்து சிவராஜ் சிங் அரசு நடவடிக்கை

0 2881
மத்தியப் பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது: கொரோனா தொற்று பரவலையடுத்து சிவராஜ் சிங் அரசு நடவடிக்கை

த்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர், போபால் உள்ளிட்ட நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தபட உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சவுகான் தெரிவித்துள்ளார்.

கோவிட் பரவல் அதிகமாகியுள்ள 5 மாநிலங்களில் மத்தியப் பிரதேசமும் ஒன்று. அங்கு கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்துப் பரவி வருவதால், இன்று அல்லது நாளை முதல் இரவு நேர ஊரடங்கை அறிவிக்க உள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

ரயில், பேருந்து, விமானம் மூலம் மகாராஷ்ட்ராவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சிவராஜ்சிங் சவுகான் வேண்டுகோள் விடுத்தார்.

மகாராஷ்ட்ராவில் இருந்து வரும் சரக்கு லாரிகளுக்குத் தடையில்லை என்றும் அனைத்து ஓட்டுனர்களுக்கும் தீவிர சோதனைகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments