இலங்கையில் முஸ்லீம் பெண்கள் பொது இடங்களில் புர்கா அணியத் தடை ?

0 3942
இலங்கையில் முஸ்லீம் பெண்கள் பொது இடங்களில் புர்கா அணியத் தடை ?

லங்கையில் முஸ்லீம் பெண்கள் பொது இடங்களில் புர்கா அணியத் தடை விதிக்கவும், மதக்கல்வி போதிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதரஸாக்களுக்கு தடை விதிக்கவும் நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.

கொழும்புவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை  அமைச்சர் சரத்  வீரசேகர இப்பரிந்துரை கேபினட் முடிவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முழு முகத்தையும் மூடக்கூடிய புர்காவால், நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 

நாடாளுமன்ற குழு சமர்பித்துள்ள அறிக்கையில், மத ரீதியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments