ஊரடங்கை அமல்படுத்த எங்களை கட்டாயப்படுத்த வேண்டாம்: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

0 7456
ஊரடங்கை அமல்படுத்த எங்களை கட்டாயப்படுத்த வேண்டாம்: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

டுமையான ஊரடங்கை அமல்படுத்த தங்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

ஹோட்டல் மற்றும் உணவக சங்கங்கள், ஷாப்பிங் சென்டர் குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட காணொலி முறையிலான கூட்டத்தில் பேசிய அவர், மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

இது கடைசி எச்சரிக்கை எனக் கூறிய உத்தவ் தாக்கரே, சுயஒழுக்கத்திற்கும், கட்டுப்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை நாம் உணர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த வாரம் மும்பை வந்த மத்தியக் குழுவினரின் உறுப்பினர் ஒருவர் ஹோட்டல்களில் யாரும் மாஸ்க் அணிவதில்லை என்றும், சமூக இடைவெளி எதையும் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் கூறியதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments