தனக்கு வாய்ப்பு வழங்காதது ஏன், எனக் கேட்டு கண்ணீர் விட்ட தோப்பு வெங்கடாசலம்

0 7525

ரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் தனக்கு வாய்ப்பு வழங்காதது ஏன் எனக் கேட்டு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கண்ணீர் விட்டு அழுத நிலையில், உடனிருந்த ஆதரவாளர்களும் கதறி அழுதனர்.

பெருந்துறை தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் வெற்றி பெற்று தோப்பு வெங்கடாசலம் அமைச்சரானார். அதன்பிறகு 2016- சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வாய்ப்பு அளிக்கபட்டது. ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ஜெயக்குமார் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், 10 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த தன்னை எச்சில் இலையைப் போல தூக்கி எறிந்துவிட்டனர் எனக் கூறி கண்ணீர் விட்டார். அவரைப் பார்த்து உடனிருந்த ஆதரவாளர்களும் கதறி அழுதனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments