அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் தேர்தல் பிரசாரம்
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், வருகிற செவ்வாய்க்கிழமை முதல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று, சேலத்திலிருந்து, முசிறி, தோகைமலை வழியாக விராலிமலைக்கு வரும் முதலமைச்சர், அத்தொகுதியின் வேட்பாளரான அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
புதன்கிழமையன்று, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், நன்னிலம், மன்னார்குடி, திருவாரூர் ஆகிய தொகுதிகளில், அமைச்சர் ஆர்.காமராஜ் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஆதரவு திரட்டுகிறார்.
Comments