சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடை திறப்பு - திருவிதாங்கூர் தேவஸ்தானம்

0 2180

ங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் தேதி திறக்கப்படுகிறது. பங்குனி மாத பூஜைக்காக அந்த கோவில் நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

தொடர்ந்து 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாத பூஜையின் தொடர்ச்சியாக வரும் 19-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.

28 - ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆராட்டு நடைபெறும். வருகிற 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை தினசரி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments