இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் - தேசிய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நடப்பு ஆண்டில் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, கிழக்கு உ.பி., ஜார்க்கண்டில் வழக்கமான வெப்பநிலையைவிட 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிக வெப்பம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மே மாதம் வரை கூடுதல் வெப்பம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments