மார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0 4397
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, வருகிற 15 மற்றும் 16ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஏற்கனவே,I D B I வங்கியை விற்பனை செய்தது போல மேலும் 2 பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க முன்வந்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

அரசுத் துறைகளின் பணப்பரிவர்த்தனை - வரிவசூல் - ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளையும் பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் வங்கிகளுக்கு மாற்றக்கூடிய முடிவையும் மத்திய அரசு எடுத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments