புர்கா அணிய தடை தடைவிதிப்பதுடன், 1000 க்கும் அதிகமான மதரசாக்களை மூடவும் இலங்கை முடிவு

0 59014
இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவுக்கு தடைவிதிப்பதுடன், ஆயிரத்திற்கும் அதிகமான மதரசாக்கள் எனப்படும் இஸ்லாமிய பள்ளிகளை மூடப்போவதாகவும் இலங்கை உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்புவில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த அவர், இந்த முடிவு கேபினட் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் கூறினார்.

முழு முகத்தையும் மூடக்கூடிய புர்காவால், நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுதல் ஏற்படுவதாக அவர் கூறினார்.

கடந்த 2019 ல் இலங்கையில் கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து புர்கா அணிய தற்காலிக தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments