ரேசன் கடைகளில் "பனை வெல்லம்" விற்பனை என திமுக வாக்குறுதி.!
ரேசன் கடைகளில், சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களுடன், பனை வெல்லமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படும் என, திமுக வாக்குறுதி அளித்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பனைத் தொழிலாளர்கள், பனை வெல்ல உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக பனை வெல்லம் கொள்முதல் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
பனை பொருள் உற்பத்தியில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், அவற்றை சந்தைப்படுத்தவும் திட்டம் வகுக்கப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
Comments