மின் அழுத்த கோளாறு காரணமாக சதாப்தி ரயிலில் தீ விபத்து

0 1868
உத்தரகாண்ட் மாநிலத்தில் சென்றுகொண்டிருந்த சதாப்தி விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

டெல்லி - டேராடூன் சதாப்தி விரைவு ரயிலின் ஒரு பெட்டியில் தீப்பற்றியதில் அது முழுவதுமாக எரிந்து கூடானது. பயணியர் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் உயிர்தப்பினர்.

டெல்லியில் இருந்து உத்தரக்கண்ட் மாநிலம் டேராடூன் நோக்கிச் சென்ற சதாப்தி விரைவு ரயில் கான்ஸ்ரோ என்னுமிடத்தில் சென்றபோது அதன் ஒரு பெட்டியில் தீப்பிடித்தது.

தகவல் அறிந்ததும் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தீப்பிடித்த பெட்டியிலிருந்த பயணியர் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். தீப்பிடித்த பெட்டி மட்டும் தனியாகக் கழற்றிவிடப்பட்டதால் மற்ற பெட்டிகளுக்குத் தீ பரவவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments