47 மொழிகளில் பேசும் மனித வடிவிலான ரோபோவை உருவாக்கி மும்பையைச் சேர்ந்த கணினி ஆசிரியர் சாதனை
47 மொழிகளில் பேசும் மனித வடிவிலான ரோபோவை உருவாக்கி, மும்பையைச் சேர்ந்த கணினி ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.
தினேஷ் பட்டேல் என்ற ஆசிரியர், பிளாஸ்டிக், அலுமினியம், மரக்கட்டை, அட்டைப் பெட்டி உள்ளிட்ட பொருட்களை வைத்து, ஷாலு என்ற மனித வடிவிலான ரோபோவை வடிவமைத்துள்ளார்.
இந்த ரோபோவை உருவாக்க 3 வருடங்கள் ஆனதாகவும் 50ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட 9 இந்திய மொழிகளிலும், உலக அளவில் 38 மொழிகளிலும் பேசும் திறன் கொண்ட இந்த ரோபோ, நாம் கேட்கும் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளுக்கும் பதிலளிக்கும்.
இந்த ரோபோவை பள்ளிகளில் ஆசிரியராகவும் பயன்படுத்தலாம் எனவும் தினேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
Comments