புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0 5675
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில், திமுக 13 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. 

உருளையன்பேட்டையில் கோபாலும், உப்பளத்தில் அனிபால் கென்னடியும், மங்கலத்தில் சண்குமரவேலும் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர். முதலியார்பேட்டையில் சம்பத்தும், வில்லியனூரில் சிவாவும், நெல்லித்தோப்பு தொகுதியில் கார்த்திகேயனும், ராஜ்பவனில் எஸ்.பி.சிவக்குமாரும், மண்ணாடிப்பட்டு தொகுதியில் கிருஷ்ணனும் களம் காண்கின்றனர்.

காலாப்பட்டு தொகுதிக்கு முத்துவேலும், திருப்புவனை தனித்தொகுதிக்கு முகிலனும், காரைக்கால் தெற்கு தொகுதிக்கு நாஜிமும், நிரவி திருப்பட்டினம் தொகுதிக்கு நாக தியாகராஜனும் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பாகூர் தொகுதிக்கான வேட்பாளர் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments