ஜார்கண்டில் தனியார் வேலைவாய்ப்பில் மாநில மக்களுக்கு 75 சதவிகித இட ஒதுக்கீடு: விரைவில் அரசு அறிவிப்பு வெளியாகும் என தகவல்

0 2768
ஜார்கண்டில் தனியார் வேலைவாய்ப்பில் மாநில மக்களுக்கு 75 சதவிகித இட ஒதுக்கீடு: விரைவில் அரசு அறிவிப்பு வெளியாகும் என தகவல்

ரியானாவை தொடர்ந்து, ஜார்கண்ட் மாநில அரசும், தனியார் துறை வேலைவாய்ப்பில் 75 சதவிகித இட ஒதுக்கீட்டை சொந்த மாநில மக்களுக்கு வழங்கும் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதற்கான அறிவிப்பை வரும் 17 ஆம் தேதி, மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவிப்பார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி தனியார் துறைகளில், மாத ஊதியம் 30 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பணிகளில் 75 சதவிகிதம், ஜார்கண்ட் மாநில மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதைப் போன்ற பணி ஒதுக்கீடு பாணியை அரியானா அரசு ஏற்கனவே நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments