கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதன் எதிரொலி - திருமணம், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு

0 5418
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக, திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கையை குறைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக, திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கையை குறைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரங்குகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 500 ல் இருந்து 200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகள் போன்றவற்றில் 50 பேர் வரை மட்டுமே இனி பங்கேற்க முடியும்.

அதே நேரம் இது போன்ற நிகழ்ச்சிகள் திறந்த வெளியில் நடத்தப்படுமானால், சமூக இடைவெளி மற்றும் மாஸ்குகளுடன் 100 பேர் வரை பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஷிவமோகா மாவட்டத்தில் ஒருவருக்கு தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பல்லாரி மாவட்டத்தில், துபாயில் இருந்து வந்த மேலும் 2 பேருக்கு அதே ரக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments