H-1B விசா தொடர்பான பாதக முடிவுகளை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக ஜோ பைடன் நிர்வாகம் தகவல்
முன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தால், H-1B உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசாக்கள் மீது எடுக்கப்பட்ட பாதகமான முடிவுகளை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசாக்களை ரத்து செய்து 3 கொள்கை முடிவுகளை டிரம்ப் அறிவித்தார். அதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த ஐ.டி பணியாளர்கள் அங்கு வேலைபார்க்கும் வாய்ப்புகளை இழந்தனர்.
இந்த நிலையில் இந்திய ஐ.டி பணியாளர்களுக்கு பெரும் ஆறுதல் தரும் விதத்தில், விசா விதிகளை மாற்ற உள்ளதாக அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Comments