பிரேசிலில் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிக்கு அதிகாரப்பூர்வ அனுமதி
சீரம் மற்றும் ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிக்கு பிரேசில் சுகாதார கட்டுப்பாடு ஆணையம் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கி உள்ளது.
பிரேசிலில் கடந்த ஒரு நாளில் மட்டும் 2 ஆயிரத்து 500 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டு ஆணையம் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை பொது விநியோகம் செய்ய பூரண அனுமதியை வழங்கி உள்ளது.
இதுகுறித்து இணையதள கலந்துரையாடலில் பேசிய பிரேசில் சுகாதார கட்டுப்பாட்டு ஆணைய தலைமை இயக்குநர் கஸ்டாவோ மென்டிஸ் (Gustavo Mendes) அஸ்ட்ராஜெனிகாவின் இறுதி கட்ட ஆய்வு தரவுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததை அடுத்து அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், பிரேசிலின் பியோகிரஸ் நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசி தயாரிப்பு பணியை தீவிரப்படுத்த முடிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே சீரம் நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பிரேசிலில் அவசர கால தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments