4 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு : கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை
செங்கல்பட்டு மாவட்டம் பி.வி களத்தூர் அருகே காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
கல்பட்டு கிராமத்தை சேர்ந்த ரோகிணி என்ற அந்த சிறுமி கடந்த 8 ஆம் தேதி காலை வீட்டை வீட்டு சென்றுள்ளார்.
அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி சில ஆண் நண்பர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசிய படி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
4 நாட்களாக வீடு திரும்பாததால் பெற்றோர் திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று கல்பட்டு கிராமத்தில் உள்ள பழடைந்த கிணற்றில் சடலம் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அழுகிய நிலையில் இருந்த சிறுமியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் சிறுமியின் செல்போன் வீட்டில் இருந்ததாகவும் அதனை கைபற்றிய போலீசார் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.
Comments