ஈரோட்டில் கொரோனா பரவல் அதிகரித்ததன் எதிரொலி..! வெளி மாவட்டங்கள் செல்லும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
ஈரோடு மாவட்டம் சத்யமங்கலத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்கள் தினமும் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூரில் உள்ள நூற்பாலைகளுக்கு வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்புகின்றனர்.
ஈரோட்டில் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், வெளி மாவட்டங்கள் செல்லும் தொழிலாளர்களுக்கு மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வைத்து சளி மாதரிகளை சேகரிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Comments