முகேஷ் அம்பானி வீட்டருகே கண்டெடுக்கப்பட்ட கார் மர்மம் தொடர்பான வழக்கு; மன்சுக் ஹிரேனின் தற்கொலை செய்யவில்லை என்பதற்கான தடயங்கள் கிடைத்தன
முகேஷ் அம்பானி கார் மர்மம் தொடர்பான வழக்கில், மன்சுக் ஹிரேனின் உடல் கண்டெடுக்கப்பட்ட ஆற்றங்கரையில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட காரில் வெடிகுண்டுகளுக்கான பொருட்கள் இருந்ததையடுத்து காரின் உரிமையாளரான மன்சுக் ஹிரேன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் சில நாட்களுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 25ம் தேதி மன்சுக் ஹிரேன் உடல் ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தேசியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
மன்சுக் ஹிரேன் தற்கொலை செய்யவில்லை என்றும் கொலை செய்யப்பட்டார் என்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருந்தால் வயிறுமுட்டத் தண்ணீர் இருந்திருக்கும்.
ஆனால் அவர் வயிற்றுக்குள் தண்ணீர் இல்லை. அவர் உடலில் மண் ஒட்டிய அடையாளமும் இல்லை. உடலில் பல இடங்களில் காயம் இருந்தது ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் உடல் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கும் கரை ஒதுங்கியிருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments