வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு
மத்திய அரசு கொண்டு வந்த வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்து விளக்கம் அளிக்குமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக 1991ம் ஆண்டில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகான வழிபாட்டுத் தலங்களில் எந்த வித மாற்றமும் கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 1192ம் ஆண்டில் பிருத்விராஜ் சவுகான் என்ற மன்னரை முகமது கோரி படையெடுத்து வென்ற பிறகு இந்தியாவில் பல இந்துகோவில்கள் இடிக்கப்பட்டு முஸ்லீம் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டதாக அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள், பாபர் மசூதி தவிர மற்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சுதந்திரத்தின்போது இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும், இதில் எந்தவித மாற்றமும் ஏற்க முடியாது என்றும் மத்திய அரசு கொண்டு வந்த வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments