கார் கதவு மோதி மம்தா பானர்ஜிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக அறிக்கை
கார் கதவு மோதி மம்தா பானர்ஜிக்கு காலில் எலும்புமுறிவு காயம் ஏற்பட்டிருப்பதாக வங்காள தலைமைச் செயலாளர் அலப்பன் பாந்தோபத்யாயா தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தாம் சிலரால் நந்திகிராமில் தாக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறியதற்கு முரணாக இந்த அறிக்கை உள்ளது.
மம்தா பானர்ஜியின் காயம் குறித்து விளக்கம் தரும்படி அரசுத் தலைமைச் செயலருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.நேற்று விசாரணை நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்தார்.
காணொலி மூலம் அந்த அறிக்கை குறித்து தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
Comments