மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா எதிரொலி..! 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்

0 4544
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா எதிரொலி..! 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்

காராஷ்ட்ராவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக எட்டு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆயினும் மும்பை நகருக்கு இரவு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மும்பை மக்கள் முகக்கவசம் அணிந்து இடைவெளியைக் கடைபிடித்து பாதுகாப்புடன் இருக்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மும்பையில் மீண்டும் ஊரடங்கு வருவதற்கான வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். புனே, அகோலா, பான்வெல், நவி மும்பை ஆகிய இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சில இடங்களில் இந்த ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 800 க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இதுவரை மொத்தம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments