பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு

0 1621
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு

ங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் போதும், 5 நாள் பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவது வழக்கமாகும். மாத பூஜையை முன்னிட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதன் தொடர்ச்சியாக வரும் 19-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.

மாத பூஜை மற்றும் விழா நாட்களில் 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments