லாரி வைத்திருக்கும் ஒரு ஏழை விவசாயிக்கு போராட உரிமையில்லையா ? தமிழகத்துக்குள் ஊடுருவிய பின்னணி

0 24874
லாரி வைத்திருக்கும் ஒரு ஏழை விவசாயிக்கு போராட உரிமையில்லையா ? தமிழகத்துக்குள் ஊடுருவிய பின்னணி

விவசாயிகள் எனக்கூறி கன்னியாகுமரியில் சைக்கிள் பேரணியை தொடங்க முயன்ற ஹரியானவை சேர்ந்தவர்களை, சுற்றிவளைத்து தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.  கண்டெய்னர் லாரியில் சைக்கிள்களுடன் தமிழகத்திற்குள் ஊடுருவிய விவசாய போராட்ட குழுவின் மாஸ்டர் பிளான் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் 100 நாட்களை கடந்தும் டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களின் கவனம். விவசாயிகள் போராட்ட களத்தில் இருந்து திசைமாறி தேர்தல் களத்தை நோக்கி திரும்பியுள்ளது.

இந்த நிலையில் பாரதீய கனதா கட்சிக்கு எதிராக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள, போராட்டகுழுவை சேர்ந்த சிலர் ஒரு கண்டெய்னர் லாரியில் ஏராளமான உணவு பொருட்கள் மற்றும் சைக்கிள்களுடன் கன்னியாகுமரிக்குள் நுழைந்துள்ளனர்.

அங்கு சட்டமன்ற தேர்தலுடன் நடக்கவிருக்கின்ற நாகர்கோவில் நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை எதிர்த்து சைக்கிள் பேரணியாக சென்று பிரசாரத்தை முன் எடுத்ததாக கூறப்படுகின்றது. இதற்கு அங்குள்ள பாஜக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அனுமதியின்றி சைக்கிள் பேரணி செல்வது தெரியவந்தது. மேலும் விவசாயிகள் என்ற பெயரில் ஹரியானாவை சேர்ந்த சிலரை டிப்டாப் உடையணிந்த இளைஞர் ஒருவர் கண்டெய்னர் லாரியில் அழைத்து வந்து வீதியில் களமிறக்கி விட்டு அதனை வீடியோ பதிவு செய்து கொண்டிருப்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

டெல்லி போலீசுக்கு சவால் விட்டது போல நம்ம ஊர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் போலீசார் அவர்களை ஒவ்வொருவராக கைது செய்து வேனில் ஏற்றினர். இறுதியாக அவர்களை அழைத்து வந்த டிப்டாப் உடையணிந்த ஈவெண்ட் மேனஜரும் கைது செய்யப்பட்டார்

பேரணி செல்ல எடுத்து வந்த அனைத்து சைக்கிள்களும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் ஆதாயம் அடையும் திட்டத்துடன், தேர்தல் நடத்தை விதியை மீறி அனுமதியின்றி நடத்தப்பட இருந்த பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் விவசாயிகள் அல்ல, மண்டி நடத்துவோர் என்று பா.ஜ.க தரப்பில் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ஈவெண்ட் மேனேஜர் உதவியுடன் கன்னியாகுமரிக்கு லாரியில் வந்து போராட்டம் நடத்தும் இவர்கள் எப்படி ஏழை விவசாயிகளாக இருக்க முடியும் என்ற கேள்வி அங்கிருந்த மக்களிடையே எழுந்துள்ளது..!

பொங்கலோ, போராட்டமோ எதுவாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அது அசவுகரியமாகி விடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments