விண்வெளித் துறையில் ரூ. 10,000 கோடி முதலீடு செய்யும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்..!
பொதுத்துறையைச் சேர்ந்த நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் அடுத்த ஐந்தாண்டுகளில் விண்வெளித் துறையில் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வணிக நோக்கில் செயற்கைக் கோள்கள், விண்கலங்களை ஏவுவதற்காக நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் அண்மையில் பிரேசில் நாட்டின் அமேசானியா செயற்கைக்கோளை இந்திய ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.
இந்த நிறுவனம் ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் என்னும் அளவில் அடுத்த ஐந்தாண்டுகளில் மொத்தம் பத்தாயிரம் கோடி ரூபாயை விண்வெளித் துறையில் முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பங்கு வெளியீடு மற்றும் கடன்பத்திரங்கள் மூலம் இந்தத் தொகையைத் திரட்ட உள்ளது. தனது திட்டங்களைச் செயல்படுத்த 300 பேரைப் பணியமர்த்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Comments