அமைச்சர்கள் தொகுதிக்கு வசதி செய்வது சட்ட விரோதம் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்
அமைச்சர்கள் தங்கள் தொகுதிக்கு வசதிகள் செய்து கொடுப்பதைச் சட்டவிரோதமாகக் கருத முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்ட நிதியில் இருந்து அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும் உட்கட்டமைப்புப் பணிகளுக்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பணிகளுக்கான டெண்டர் விவரங்களை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அமைச்சர்கள் தங்கள் தொகுதிக்கு வசதிகள் செய்து கொடுப்பதைச் சட்டவிரோதம் எனக் கூற முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்குத் ஒத்திவைத்தனர்.
தேர்தல் நேரத்தில் ஏதேனும் கருத்துக்களை கூறினால், அது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
Comments