"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சென்னை திரு.வி.க.நகர் தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்க வலியுறுத்தி அப்பகுதி அதிமுகவினர் போராட்டம்
சென்னை திரு.வி.க.நகர் தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக கூட்டணியில் திரு.வி.க.நகர் தொகுதி தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரு.வி.க.நகர் தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்குமாறு கூறியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோன்று, செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தூசி.கே.மோகனை மாற்றக்கோரி செய்யாறு-ஆரணி சாலையில் அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments