நாடு விடுதலை பெற்றதன் 75 ஆண்டு விழாவையொட்டி தண்டிக்கு நடைபயணத்தைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

0 1697
நாடு விடுதலை பெற்றதன் 75 ஆண்டு விழாவையொட்டி அகமதாபாத்தில் இருந்து தண்டிக்கு நடைபயணத்தைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

நாடு விடுதலை பெற்றதன் 75 ஆண்டு விழாவையொட்டி அகமதாபாத்தில் இருந்து தண்டிக்கு நடைபயணத்தைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை 2022 ஆகஸ்டு 15 வரை 75 வாரங்கள் கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது. இதன் தொடக்கமாகக் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து தண்டிக்கு நடைபயணத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, லோகமான்ய திலகரின் பூரண சுயராஜ்யம், இந்திய விடுதலைப் படையின் டெல்லி சலோ, வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றை ஒருபோதும் மறக்க முடியாது எனத் தெரிவித்தார்.

மங்கள் பாண்டே, தாந்தியா தோபே, ராணி லட்சுமிபாய், பகத்சிங், நேரு, பட்டேல், அம்பேத்கர் ஆகியோரிடமிருந்து நாம் ஊக்கம் பெறுவதாகக் குறிப்பிட்டார். தடுப்பு மருந்து தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெற்றதால் உலக நாடுகள் அனைத்தும் பயன்பெறுவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments