தொடங்கியது வேட்புமனுத் தாக்கல்; களைகட்டும் தேர்தல் திருவிழா..!

0 5226
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

மிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. முதல்நாளிலேயே சில முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணைமுதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அங்குள்ள சாலை காளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், திறந்தவெளி ஜீப்பில் ஊர்வலமாக வந்த அவர்,சரியாக பிற்பகல் 2 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அதிமுக சார்பில் போட்டியிட தனது வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அலுவலரான ஜெகதீஸ்வரனிடம் தாக்கல் செய்தார்....

 

சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்தக் கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

 

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை தவிர்த்து வரும்19-ந்தேதி வரை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் தேதி என்றும், வேட்புமனுக்களை திரும்ப பெற 22-ந்தேதி கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments