தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அரசியல் கட்சிகள் : வேட்பாளர்களை மாற்றக் கோரி கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

0 2851
தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அரசியல் கட்சிகள் : வேட்பாளர்களை மாற்றக் கோரி கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

ட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், பல்வேறு தொகுதிகளை சேர்ந்த தொண்டர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை மாற்றக் கோரி தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியை திமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மணப்பாறை பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கனிதா சம்பத்தை அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பெண் உறுப்பினர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியை அதிமுக கூட்டணி கட்சியான மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கியதை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மதுராந்தகம் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேலை மாற்றக் கோரி 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments