"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பாம்பே பேகம்ஸ் தொடரை ஒளிபரப்புவதை நிறுத்தும்படி நெட்பிளிக்ஸ்கு குழந்தைகள் உரிமைக்கான தேசிய ஆணையம் அறிவுறுத்தல்
பாம்பே பேகம்ஸ் என்னும் தொடரை ஒளிபரப்புவதை நிறுத்தும்படி நெட்பிளிக்ஸ் இணையத்தளத்துக்குக் குழந்தைகள் உரிமைக்கான தேசிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாம்பே பேகம்ஸ் இணையத்தொடரில் சிறார்கள் பாலியல் உறவு, போதைப்பொருள் பயன்பாடு குறித்த காட்சிகள் உள்ளதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து அந்தத் தொடரை ஒளிபரப்புவதை நிறுத்தும்படி குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் நெட்பிளிக்சுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் பாம்பே பேகம்ஸ் தொடரில் காட்டப்படும் காட்சிகள் பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைப்பதுடன், சிறார்களைத் தவறாகப் பயன்படுத்தவும் அவர்கள் மீதான சுரண்டலுக்கும் வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து எடுத்த நடவடிக்கை பற்றி 24 மணி நேரத்துக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Comments