ரயில்வே, தொலைத்தொடர்புத்துறை மூலமாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதித்திரட்ட மத்திய அரசு திட்டம்
ரயில்வே, மற்றும் தொலைத் தொடர்பு மூலமாக ஒரு லட்சம் முப்பதாயிரம் கோடி ரூபாய் நிதித்திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்கேற்பை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. நிலக்கரி, ரயில்வே, விமானப் போக்குவரத்து தொலைத் தொடர்பு உள்ளிட்டவற்றில் தனியார் முதலீடு அதிகரிக்க இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில்வேயை தனியார் மயமாக்குவதன் மூலம் 90 ஆயிரம் கோடி ரூபாயும், செல்போன் டவர்கள் ஏலம் விடுவதில் 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments