நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பிஇ -பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இயற்பியலும் கணிதமும் கட்டாயமில்லை - AICTE அறிவிப்பு

0 11881
நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பிஇ -பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இயற்பியலும் கணிதமும் கட்டாயமில்லை - AICTE அறிவிப்பு

டப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பிஇ மற்றும் பி டெக் பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கணிதமும் இயற்பியலும் கட்டாயமில்லை என்று அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சிலான AICTE அறிவித்துள்ளது.

தற்போது உள்ள நடைமுறைப்படி இவை கட்டாயமாக உள்ளன.பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், இயற்பியல், கணக்கு, கணினி அறிவியல், வேதியியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், போன்ற துறைகளில் ஏதேனும் மூன்று துறைகளில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

வணிகவியல் மற்றும் வேளாண்மை தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணிதம் தான் அனைத்து பொறியியல் பட்டப்படிப்புக்கும் அடித்தளம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையை நடப்புக் கல்வியாண்டில் அமலுக்குக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments