முக்கிய உதிரிபாகங்கள் விலை உயர்வால் டிவி விலையை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் திட்டம்
எல்.இ.டி. டிவி தயாரிப்பில் முக்கிய உதிரிபாகமாக கருதப்படும் ஓபன் செல் பேனல்களின் விலை உயர்ந்துள்ளதால் ஏப்ரல் முதல் டிவி விலையை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
சர்வதேச சந்தைகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒபன் செல் பேனல்களை கொண்டு உள்நாட்டில் எல்.இ.டி. டிவிக்கள் தயாரிக்கப்படும் நிலையில், அவற்றின் விலை 35 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, ஏப்ரல் முதல் டிவி விலையை 5 முதல் 7 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக பானாசோனிக் நிறுவனத்தின் இந்திய பிரிவுத்தலைவர் மணீஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
அதேப்போல, தாம்ஸன் மற்றும் கோடக் டிவிக்களை தயாரித்து வரும் சூப்பர் பிளாஸ்டிரானிக்ஸ் நிறுவனமும், ஏப்ரல் முதல் டிவி விலையை 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
Comments