கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை அதிரடி குறைப்பு
கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை டோஸ் ஒன்றுக்கு இருநூறு ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்த இருநூற்றி ஐம்பது ரூபாயாக கட்டணம் பெறப்பட்டு வநத்து. தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், போதுமான டோஸ்கள் கையில் இருப்பதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன், இருநூறு ரூபாய்க்குள் தடுப்பூசியின் விலையைக் குறைக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இந்த கோவிஷீல்ட்டை இந்தியாவின் புனே நகரில் உள்ள சீரம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது.இதுவரை சுமார் 2 கோடியே 57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Comments