தமிழகத்திற்கு 118 தேர்தல் செலவின பார்வையாளர்கள் இன்று வருகை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தேர்தலை கண்காணிக்க 118 தேர்தல் செலவின பார்வையாளர்கள் இன்று தமிழகம் வர உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். தேர்தல் பாதுகாப்பிற்காக 65 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளது என்ற அவர், வேட்பு மனு விண்ணப்பங்களை ஆன் லைனிலும் பெறலாம் என்றார். வேட்புமனு கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என்றும், மாற்று திறானளிகளுக்கு வாக்குசாவடிகளில் வாக்களிக்க சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்த, கிருமி நாசினி தெளிக்க, மாற்று திறனாளிகளுக்கு உதவ என 3 உதவியாளர்கள் முதல் முறையாக நியமிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments