காதலால் கர்ப்பம் ; காட்டி கொடுத்த வயிறு.... கைதான ஆவடி ஆட்டோ டிரைவர்!
ஆவடி அருகே திருமண ஆசை கூறி,16 வயது சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆவடியை அடுத்த திருநின்றவூர், நத்தம்பேடு, கம்பர் தெருவை சேர்ந்தவர் நரேந்திரன் .
இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நரேந்திரனுக்கு அதேப்பகுதியை சேர்ந்த பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைப்பெற்று, ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் நரேந்திரனுக்கும் ஆவடியை அடுத்துள்ள சுதேசி நகரை சேர்ந்த 16வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்குமான நட்பு காதலாக மாறியுள்ளது.
நரேந்திரன் , தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை ஒன்று இருப்பதை சிறுமியிடம் மறைத்துள்ளார். மேலும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன், என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதன் காரணமாக அச்சிறுமி கருவுற்றதாக கூறப்படுகிறது.
ஆட்டோ டிரைவர், நரேந்திரனுடனான பழக்கத்தை சிறுமி வீட்டில் சொல்ல வில்லை என்றாலும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாய் அவரின் வயிறு காட்டி கொடுத்துள்ளது.
இந்த செய்தி சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வர, வயிறு குறித்து விசாரித்துள்ளனர். முதலில் ஆட்டோ காதலன் பற்றி சொல்ல மறுத்த சிறுமி, ஒரு கட்டத்தில் அவருடனான காதலையும் அதனால் ஏற்பட்ட கருவையும் பற்றி கூறியுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன பெற்றோர், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனர் நரேந்திரனை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி சிறையில் அடைத்தனர்.
Comments