மத்திய அரசுக்கு இடைக்காலப் பங்காதாயம் ரூ. 376.94 கோடி வழங்கியது எச்ஏஎல்
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் இரண்டாவது இடைக்காலப் பங்காதாயமாக அரசுக்கு 377 கோடியே 94 லட்ச ரூபாயை வழங்கியுள்ளது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 89 புள்ளி ஒன்பது ஏழு விழுக்காடு பங்குகள் உள்ளன.
இந்த நிறுவனம் ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு பங்குக்கு 15 ரூபாய் என்கிற கணக்கில் இடைக்காலப் பங்காதாயமாக மொத்தம் 501 கோடியே 58 லட்ச ரூபாயை வழங்கியது.
இந்நிலையில் இரண்டாவது இடைக்காலப் பங்காதாயமாகவும் அதே தொகையை அறிவித்துள்ளது. இதில் அரசின் பங்கான 376 கோடியே 94 லட்ச ரூபாய்க்கான காசோலையைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் எச்ஏஎல் நிறுவனத் தலைவர் மாதவன் வழங்கினார்.
Comments