தமிழகத்தில் இருபதுக்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு

0 2236
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, மதுரை நகரங்களில் இருபதுக்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, மதுரை நகரங்களில் இருபதுக்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதைத் தடுக்கும் வகையில் வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் 650 பேர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் புகார் மற்றும் தகவலின் அடிப்படையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், கோவை, மதுரை நகரங்களில் இருபதுக்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் உணவுப் பொருள் வணிக நிறுவனத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments