மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வரும் 15ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், வருகிற 15ஆம் தேதி முதல், 21ஆம் தேதி வரையில், முழுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிரா.
இங்கு, மும்பை மட்டுமின்றி, புனே, தானே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் கொரோனா பரவல், மீண்டும் வகைதொகையின்றி அதிகரித்து வருகிறது. தானேவில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
புனேவில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அடங்கி ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாக்பூர் நகரில், வருகிற 15ஆம் தேதி முதல், முழுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி, பால், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் விற்பனை கடைகள், மருத்துவமனைகள் மட்டும் திறந்திருக்கும். மற்றவை, வருகிற 21ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது.
Comments