நிகரகுவாவில் வெடித்து சிதறிய சான் கிறிஸ்டோபல் எரிமலை; 7.கி.மீ உயரத்திற்கு பரவிய சாம்பல் புகை..!
நிகரகுவாவில் உள்ள சான் கிறிஸ்டோபல் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் காற்றில் 7கிலோ மீட்டர் உயரத்திற்குப் பரவியுள்ளது.
கடந்த சில தினங்களாக வெடிக்கும் தருவாயில் இருந்த பழமையான சான் கிறிஸ்டோபல் எரிமலை கடந்த செவ்வாய்கிழமை திடீரென வெடிக்க ஆரம்பித்தது.
இதனால் எரிமலையை சுற்றி 2 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறவும், எரிமலையின் சீற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சுற்றுப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது
Comments