திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் போட்டியிடும் 6 தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல்?

0 3924
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் போட்டியிடும் 6 தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல்?

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

மதுரவாயல், கோவில்பட்டி, திண்டுக்கல், கோவை வடக்கு, திருப்பூர் தெற்கு, பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விருப்பத் தொகுதிகளாக பட்டியலிட்டுள்ளது.

மதுரவாயல் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், மார்க்சிஸ்டுக்கு ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும், பத்மநாபபுரம் தொகுதியில் தற்போதையை எம்.எல்.ஏ.வாக திமுகவைச் சேர்ந்தவர் இருப்பதால், அந்த தொகுதியை ஒதுக்குவதிலும் திமுக தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

3 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments