"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
விருப்பமான சான்ட்விச்சை வாங்க 130 கி.மீ ஹெலிகாப்டர் பயணம்!
கொரோனா ஊரடங்கின் போது தமக்கு மிகவும் விருப்பமான மெக்டொனால்ட் பர்கரை வாங்க பிரிட்டனில் ஒரு பெண் 100 கிலோ மீட்டர் தூரம் வண்டி ஓட்டி சென்று, பின்னர் அதற்காக அபராதம் செலுத்தினார் என்பது பழைய செய்தி.
இப்போது, வேறு ஒரு நபர் ஊரடங்கு காலகட்டத்தில் விதிகளை மீறி, தனக்கு பிடித்த சான்ட்விச்சை வாங்க அதே பிரிட்டனில் 130 கிலோ மீட்டர் ஹெலிகாப்டரில் வந்து சென்றதாக, சான்ட்விச்சை விற்ற பிரிட்டன் உணவு நிறுவனம் ஒன்று வீடியோ வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ லட்சக்கணக்கில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சான்ட்விச் வாங்க வந்தாலும், ஊரடங்கை மீறுவது குற்றமல்லவா என அங்கலாய்த்துள்ள பிபிசி செய்தி நிறுவனம், இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Comments