திருமணம் செய்து வைக்கலனா அவ்வளவுதான்...குடும்பத்திற்கு தற்கொலை மிரட்டல் விடுத்த 60 வயது முதியவர்

0 3035

90's கிட்ஸ் பலரும் தங்களுக்கு ஒரு கல்யாணமாவது ஆகாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இரண்டாவது திருமணம் செய்து வைக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் தன் குடும்பத்தாரை மிரட்டிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சோப்ரான் சிங் . 60 வயதான அவர், திடீரென எலக்ட்ரிக் கம்பத்தின் மீது ஏறத் தொடங்கினார். சுமார் 11000 வோல்டேஜ் உள்ள எலக்ட்ரிக் கம்பத்தின் மீது சோப்ரான் ஏற தொடங்கியதும் அப்பகுதியை சுற்றி உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

5 பிள்ளைகளுக்குத் தந்தையான சோப்ரானின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்குமாறு தனது குடும்பத்தாரைப் பல முறை கேட்டுள்ளார். பேரன் பேத்தி பார்த்த வயதில் சோப்ரானிற்கு மற்றொரு திருமணம் செய்து வைப்பதற்கு குடும்பத்தினர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மின் கம்பத்தின் மீது ஏறி குடும்பத்தினருக்குத் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார் சோப்ரான். நல்ல வேளை அப்போது அந்த மின்கம்பத்தில் மின்சாரம் வராத காரணத்தால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதை அடுத்து சோப்ரானின் குடும்பத்தினர், மின்வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில், சோப்ரான் அமர்ந்திருந்த மின் கம்பத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் உயிர்ச் சேதம் தடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் பலரும் , சோப்ரானை இறங்கி வருமாறு கேட்டுக்கொண்டதின் பொருட்டு கம்பத்தை விட்டு கீழே இறங்கி வந்தார்.

90 's கிட்சுகளின் கல்யாண கனவுகள் குறித்துப் பல மீம்ஸ்கள் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கும்போது, 60 வயதான சோப்ரான், தன் இரண்டாவது திருமணத்திற்காக எடுக்கும் முயற்சியைக் கண்டு அழுவதா சிரிப்பதா என்று பலரும் குழம்பிப்போய் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments