சீன நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு சேவைத்துறையில் கட்டுப்பாடு
நாட்டின் முக்கிய கட்டமைப்புகளில் சீனா மறைமுகமாக அதிகாரம் செலுத்துவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க துவங்கி உள்ளது.
குறிப்பாக தொலைத்தொடர்பு துறையில், 4ஜி மற்றும் 5ஜி சேவைகளில் சீன நிறுவனங்களான ஹுவாவேய், ZTE போன்றவற்றுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் லைசன்ஸ் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி வரும் ஜூன் 15 ஆம் தேதிக்குப் பிறகு, இந்த சேவைக்கான உபகரணங்களை, அரசின் அங்கீகாரம் பெற்ற நம்பிக்கைக்குரிய நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே போன்று, சீனாவுடன் எல்லைப்பதற்றம் நீடிக்கும் நிலையிலும் அங்கிருந்து தொடர்ந்து தொலைத்தொடர்பு கருவிகளை வாங்கும் சில இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் மத்திய அரசின் சார்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments